ஜெகன் தான் புதிதாக வாங்கிய வீட்டிற்கு அடிக்கடி அழைத்துகொண்டிருந்தான், தீபாவளி விடுமுறையில் சென்றேன்,சிறு வயது சிநேகிதம்,சிலாகித்துப்போனேன் அவன் வரவேற்பும்,விருந்தோம்பலும் என்னை திக்குமுக்காட செய்தது.
சொந்த பிரச்சனையில் துவங்கி சர்வதேச பிரச்சனை வரை பேசி முடித்து பார்க்கும் பொழுது மணி நான்கை தொட துடித்தது.
வீட்டையும் தோட்டத்தையும் சுற்றிகாட்டுகிறேன் வா என அழைக்க ,ஆர்வமுடன் பின் தொடர்ந்தேன். அறைகளும், தரைகளும் பிரமிக்கவைத்தன.
தோட்டத்திற்கு வந்தவுடன் அங்கே குறை மாதத்தில் பிறந்த குள்ளர்களைப்போல் அங்க வளர்ச்சியற்று தொட்டிக்குள் இருந்தது மரங்கள் ஒவ்வொன்றையும்
அதன் வயதையும், விலையையும் சொல்லி சிலாகித்துபோனான்.
அவன் கண்ணில் பெருமை மின்னியதை கண்டேன்.
பறவைகளை சிறகுகளை வெட்டிவிட்டு கூண்டுக்குள் வைத்து வளர்பதற்கும்,கிளைகளை வெட்டி தொட்டிக்குள் வளர்பதற்கும் என்ன வித்தியாசமென விடை தெரியாமலே விடைப்பெற்றேன்.
Photo Courtesy: www.bonsai-plants.net
Nice.. Keep it up...
ReplyDelete