Script

Tuesday, December 28, 2010

அவலம்

மீனுக்குத்தான் வலை
விரிக்கிறோம், ஆனால்
மாட்டுவதுதென்னவோ
நாங்கள் மட்டுந்தான்,
சிங்கள இராணுவத்திடம்

Monday, December 20, 2010

நினைவுகள்

நம் காதல்
வாடிபோனாலும்
நினைவுகள் மட்டும்
நித்தம் நித்தம் புது
மொட்டுகளாய்.......

என் உடல் தீக்கிரையாகும் வரை
உன் நினைவுகள் எனக்கு
இரையாகிகொண்டிருக்கும்...

உனது பேருந்து நிறுத்தங்களையும்
தொடருந்து நிறுத்தங்களையும்
தொடும்பொழுதெல்லாம்,
உன் நினைவுகள் எனை  சுடும்

Saturday, December 18, 2010

கையெழுத்து

கையெழுத்து
அடகு கடை ரசிதுகளை
மட்டுமே அலங்கரிப்பது


Photo Courtesy: www.singas.co.uk

போன்சாய் மரங்கள்

ஜெகன் தான் புதிதாக  வாங்கிய  வீட்டிற்கு அடிக்கடி அழைத்துகொண்டிருந்தான், தீபாவளி விடுமுறையில் சென்றேன்,சிறு வயது சிநேகிதம்,சிலாகித்துப்போனேன் அவன்  வரவேற்பும்,விருந்தோம்பலும் என்னை திக்குமுக்காட செய்தது.

சொந்த பிரச்சனையில் துவங்கி சர்வதேச பிரச்சனை வரை பேசி முடித்து பார்க்கும் பொழுது மணி நான்கை தொட துடித்தது.


வீட்டையும் தோட்டத்தையும் சுற்றிகாட்டுகிறேன் வா என அழைக்க ,ஆர்வமுடன் பின் தொடர்ந்தேன். அறைகளும், தரைகளும் பிரமிக்கவைத்தன.

தோட்டத்திற்கு வந்தவுடன் அங்கே குறை மாதத்தில் பிறந்த குள்ளர்களைப்போல் அங்க வளர்ச்சியற்று தொட்டிக்குள் இருந்தது மரங்கள் ஒவ்வொன்றையும்
அதன் வயதையும், விலையையும் சொல்லி சிலாகித்துபோனான்.


அவன் கண்ணில் பெருமை மின்னியதை கண்டேன்.

பறவைகளை சிறகுகளை வெட்டிவிட்டு கூண்டுக்குள் வைத்து வளர்பதற்கும்,கிளைகளை வெட்டி தொட்டிக்குள் வளர்பதற்கும் என்ன வித்தியாசமென விடை தெரியாமலே விடைப்பெற்றேன்.
 
Photo Courtesy: www.bonsai-plants.net

ஈழத்தின் ஓலம்



வண்டுகளின் ரீங்காரம் 
நின்று போனது !!

வாண்டுகளோ  புன்னகையை
மறந்து போனது!!

மகரந்த சேர்க்கையின்றி
மரங்களெல்லாம் மலடாகிபோனது!!

இரத்தச் சேற்றை  உழுவதற்கு
நேச நாடுகளின் இலவச
வேளான்மை  கருவிகள்
வெட்ககேடு !!

வற்றிய விழிகளோடும்
தொற்றிய வியாதிகளோடும்
எம்மக்கள் முகாமில் வதைபட - தமிழில்
தேசிய கீதம் பாடவேண்டுமென
தேசம்  கடந்து
வேசதாரிகள் கண்டனக்குரல்
கொடுக்கிறார்கள்!!

Photo Courtesy: www.omiusajpic.org

கொடியது !! கொடியது !!


குடி அது கொடியது!!
குடியை விடுவோம்
குடும்பம் காப்போம்!!

கோப்புகளை புரட்ட வேண்டிய -நீ மது
கோப்பைகளோடு புரளலாமா?

மதுவா நமது இலக்கு? -அதை
மறக்காவிட்டால் நமக்கு இழுக்கு!!

போதையின் பாதையில் செல்லும்
பேதையே அது புதை குழியென
புரிந்துகொள் !!

Monday, December 13, 2010

குமுற‌ல்



வாட‌கை அறை !!
நாங்க‌ள் தின‌ம்
வாடும் அறை !

மூட்டைபூச்சிக‌ளின் ப‌டையெடுப்பை
முறிய‌டித்து ‍ அந்த‌
க‌ளைப்பிலேயே க‌ண்ணுற‌ங்கிப்போவோம்!!

நித்தம் நித்த‌ம் உரிமையாள‌ரின்
ச‌த்த‌த்தில்தான் உற‌க்க‌ம் க‌லைவோம் !!

விடுமுறை தின‌ம்கூட‌ எங்க‌ளுக்கு
விதிமுறைக்குட்ப‌ட்ட‌து!!

வ‌ய‌ல்காட்டையா க‌ட‌க்கிறாய்
வ‌ர‌வேற்ப்ப‌றையை தானே க‌ட‌க்கிறாய்
விள‌க்கெத‌ற்க்கென‌ வினா எழுப்புவார் !!

அவ‌ர் ச‌ம்ம‌த‌ம் இல்லாம‌ல்
ச‌மைய‌ல‌றைக்குள் கூட‌ நுழைய‌முடியாது!!

வெளியேறுகிறோம் என்றால்,
வைகாசி வ‌ரை இருந்தால்தான்
வைப்புத்தொகையை திருப்பித்த‌ருவேனென்கிறார்!!

முந்நூறு வெள்ளியொடு
முக‌வ‌ரியே இல்லாம‌ல் போனார்
முக‌வ‌ர் !!

வாட‌கை அறை !!
நாங்க‌ள் தின‌ம்
வாடும் அறை !