Script

Friday, June 24, 2011

நண்பா!!

தாய்மொழித் தேர்வில்
தரம் ஒன்றை தனதாக்கி
கொண்டிருந்தாலும் -நீ ஒரு
ஆங்கில அகராதி
யோகத்தை நம்பாதவன்
யோகாவை நம்புபவன்
வார்த்தை அலங்காரம் உனக்கு
தெரியாது
வாழ்கையில் அகங்காரம் உனக்கு
கிடையாது
மலை உச்சியில்
மாமிச உணவோடு உன்
கருத்தையும் சேர்த்து பரிமாறும்போது
நானும் சோழமண்டலத்துக்காரன்-என
சொல்லி மகிழ்ந்தாய்
தினம் தினம் தியானம்
செய்வாய்,    
யாருக்காக
உயிரையே தியாகம் செய்தாய்....
                                                   செம்பியன்  கோ.இராம்

Tuesday, June 21, 2011

பேரழகே! !

உன் உதட்டு  மச்சம்
உன் அழகின் உச்சம் 
அதுதான் இந்த
உலகின் அச்சம்